Sep 26, 2007

nichchalanam - a poem

வாரமொருமுறை மவுனமாக நிச்சயம்
இருப்பதாக ஒரு சங்கல்பம் !
வேடிக்கையாய் அன்று கைகால் மூலமாக
மிக அதிக விஷய பரிமாற்றம் !!

தொண்டைக்குழிவரை வந்து விட்ட வார்த்தைகள்
வன்முறையாய் நிறுத்திவைக்க
பீரிடும் ஆழ்கடல் அலைகள் போல
சிந்தனை பெருவெள்ளமாய் பெருகும்

தைலதாரையாய் ஒழுங்காயிருந்த என்
சிறு மனம் நெறி கெட்டு ஓடலாச்சு
நான் மவுனமாய் இருப்பதாக சங்கல்பித்த
அந்த அதிர்ஷ்டங்கெட்ட திரு நாளில் !!

கட்டறுந்த காளை போல
தறி கெட்டு ஓடலாச்சு என் நாவு
நாள் முழுதும் அமைதியில் முயங்கி…. பின்
அடுத்த நாள் பெருவிடுதலை கண்டு.....

ஆரவாரமான சந்தைத்தெருவில்
தீர்மானமாய் வழியில் விழி பதித்து
நிதானமாய் வெகு அமைதியாய்
கடந்து போனார் வெண்தாடி பெரியவர் ஒருவர்....

கண்ணொடு கண் நோக்கிய கணம் ஒன்றில்
உயிர்ப்பான அவர் நிச்சலனம் கண்டு
சில க்ஷணங்கள் ஸ்தம்பித்து போய் பின்.... உறுதியாய்
உதடு சொல்லும் " நாளையிலிருந்து நானும்"

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


Date of writing : 26092007
Time involved : 11.3O pm to 12.30 AM
Trigger : Gowri’s Mail on his silence Vow
Location : At home, after closing the eyes for sleep
Courtesy : Srinivasan, the Old Initiator at Isha yoga Centre who lived in Trustpuram during 2000 - 2003
Final Comment : Krishnaarpanam

0 comments: